சுமார் 30,000 விண்வெளிக் குப்பைகள் பூமிக்கு மேல் சுற்றி வருவதால் எடின்பரோ பல்கலைக்கழக விஞ்ஞானிகள் முக்கிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்கள்.
எடின்பரோ பல்கலைக்கழக விஞ்ஞானிகள் விண்வெளி தொடர்புடைய முக்கிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்கள். அதாவது கடந்த காலங்களில் அனுப்பப்பட்டுள்ள செயற்கைக்கோள்களின் பயன்பாட்டு காலம் முடிந்த பின்பும் அவை விண்வெளியில் சுற்றி வருகின்றது. இந்த வின்வெளி குப்பைகள் தற்போது செயல்பாட்டிலிருந்து வரும் செயற்கைக் கோள்களுடன் மோதுவதற்கு 50% வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளார்கள்.
மேலும் இந்த குப்பைகள் பல வழிகளில் பயன் தருகின்ற விண்வெளி சேவைகளை சீர்குலைத்து விடும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளார்கள். இந்த வின்வெளி குப்பைகள் சுமார் 30,000 வரை இருக்கும் என்று விஞ்ஞானிகள் மதிப்பிட்டுள்ளார்கள். இதனை அகற்றுவதற்கு தேவையான திட்டத்தை கிளியர் ஸ்பேஸ்-1 என்ற பெயரில் வருகின்றன 2026 ஆம் ஆண்டில் தொடங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளார்கள்.