Categories
தேனி மாவட்ட செய்திகள்

கஞ்சா பதுக்கினால் இது தான் நிலைமை…. வங்கி கணக்குகள் முடக்கம்…. 6 பேர் குண்டரில் கைது….!!

கஞ்சா விற்பனையில் கைது செய்யப்பட்ட 6 பேரின் கணக்குகள் உள்பட அவர்களது உறவினர்களின் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்டம் உத்தமபாளையத்தை அடுத்துள்ள ஓடைப்பட்டி மற்றும் ராயப்பன்பட்டி பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு போலீசார் நடத்திய சோதனையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 85 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குபதிவு செய்து காமயகவுண்டன்பட்டியில் வசிக்கும், விஜயன்(42), பூபாலன்(29) கணேசன்(26), அருண்பாண்டி(26), முரளிதரன்(41) மற்றும் ஓடைப்பட்டியை சேர்ந்த சரத்(22) ஆகிய 6 பேரை கைது செய்துள்ளனர்.

இதனையடுத்து அவர்கள் 6 பேரையும் மதுரை மத்திய சிறையில் அடைப்பட்ட நிலையில் அவர்களின் வங்கி கணக்கு விவரங்கள் மற்றும் உறவினர்கள் குறித்த விவரங்களை விசாரித்து வந்தனர். இந்நிலையில் கைது செய்யப்பட்டவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட சூப்பிரண்டு அதிகாரி பிரவீன்உமேஷ் டோங்கரே, மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்துள்ளார்.

அந்த பரிந்துரையின் அடிப்படையில் கஞ்சா விற்பனை செய்த 6 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டுள்ளார். மேலும் போலீசார் தனிப்படை அமைத்து விசாரித்ததில் 6 பேரின் வங்கி கணக்குகள் உள்பட அவரது உறவினர் வங்கி கணக்குகள் என மொத்தம் 9 பேருடைய வங்கி கணக்குகளை முடக்கியுள்ளனர். இதனைதொடர்ந்து அவர்களின் சொத்துகளையும் பறிமுதல் செய்வதற்காக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |