ராஜஸ்தான் மாநிலத்தில் 3 வயது சிறுமி கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் சித்தோர்கர் மாவட்டம் பில்வாராவைச் சேர்ந்த பெண் தன்னுடைய 3 வயது குழந்தையுடன் திருமண விழாவிற்கு சென்றுள்ளார். இந்த நிலையில் இந்த திருமணத்திற்கு வந்த ரமேஷ் தாகத் (30) என்பவர் சிறுமியுடன் விளையாடியதாக கூறப்படுகிறது. இதையடுத்து சிறுமி மாயமாகியுள்ளார். இதுதொடர்பாக, சிறுமியின் தாயார் பாசி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார், மறுநாள் திருமணம் நடந்த இடத்திலிருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கிணற்றிலிருந்து சிறுமியை உடலை மீட்டெடுத்தனர்.
சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகம் இருப்பதாகவும், இது உடற்கூராய்வில் உறுதி செய்யப்படும் என்றும் போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து, சிறுமியுடன் விளையாடிக் கொண்டிருந்த ரமேஷ் தாகத் மீது போக்சோ சட்டத்தின் கீழ்வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.