உலக அளவில் அனைவரையும் வியக்க வைக்கும் புரியாத புதிராக உள்ள கிராமம் இது. அந்த கிராமத்தில் எங்கு திரும்பினாலும் மக்கள் அனைவரும் கண்களுக்கு இரண்டு இரண்டாகவே தெரிகின்றனர். ஏனென்றால் அது இரட்டையர்கள் அதிகம் வசிக்கும் கிராமம். கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள கொடினி என்ற கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட இரட்டையர்கள் வசித்து வருகின்றனர். கிட்டத்தட்ட 20 ஆயிரம் பேர் வசித்து வரும் அந்த கிராமத்தில் இத்தனை இரட்டையர்கள் இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் வியப்புடன் காரணத்தை கண்டறிந்து வருகிறார்கள்.
ஒரு சிலர் அங்கு இருக்கும் சுற்றுச்சூழல், உணவு பழக்கம் மற்றும் தண்ணீர் ஆகியவை காரணங்களாக இருக்கலாம் என்று கூறுகின்றனர். பொதுவாக இரட்டையர்கள் அதிகம் வசிக்கும் நாடுகளின் பட்டியலில் நைஜீரியா மற்றும் பிரேசில் போன்ற நாடுகள் தான் எப்போதும் இருக்கும். அதிலும் குறிப்பாக நைஜீரியா இரட்டையர்களின் தலை நகரம் என்று அழைக்கப்படுகின்றது.
இதற்கு அடுத்ததாக இந்தியாவில் உள்ள கேரள மாநிலம் தற்போது பேசப்படுகின்றது. அங்கு இந்தியாவில் 1000 இரட்டை குழந்தைகள் பிறக்கிறார்கள் என்றால் அதில் 45 குழந்தைகள் அந்த கிராமத்தை சேர்ந்தவர்களாக உள்ளனர். அதனால் உலக அளவில் இந்த கிராமம் பிரபலமாகப் பேசப்படுகிறது. இதனை நினைத்து கிராம மக்களும் பெருமைப் படுகின்றனர். இதற்கான காரணம் என்னவென்று ஆராய்ச்சியாளர்கள் தற்போது வரை தங்களின் ஆராய்ச்சியை தொடர்ந்து கொண்டிருக்கின்றனர்.