சீனாவில் உள்ள Three Gorges Dam உலகையே ஆச்சரியப்பட வைத்தது. இந்த அணை 2006-இல் கட்டி முடிக்கப்பட்டது. இந்த அணை சீனாவின் ஹுபய் மாகாணத்திலுள்ள சான்டோபுபின் நகரத்திற்கு அருகில் அமைந்துள்ளது. இந்த அணை தற்போது இடிந்து விழும் நிலையில் உள்ளது. ஒருவேளை இந்த அணை இடிந்தால் சீனாவில் வசிக்கும் 40 கோடி மக்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்படும். கடல் மட்டத்திலிருந்து 175 மீட்டர் உயரத்தில் உள்ள Three Gorges Dam உலகிலேயே மிகப் பெரியதாகும். இது 2.2 கிலோமீட்டர் நீளம் கொண்டதாகும்.
இந்நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்படும் சீன மக்களின் சிரமத்தை போக்குவதற்காகவே முதலில் இந்த அணை கட்டப்பட்டது. அதன்பிறகு மிகப்பெரிய நீர் மின் நிலையம் கொண்டுவரப்பட்டது. ஒரு சில ஆய்வுகள் இந்த அணையின் நீர்த்தேக்கமே நிலச்சரிவுகள் மற்றும் நில நடுக்கங்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு காரணம் என கூறுகிறது. சராசரி அகலத்தில் இந்த நீர் தேக்கத்தின் மொத்த பரப்பளவு 1045 சதுர கிலோமீட்டர் ஆகும். இந்த நீர் மின் நிலையம் 2012-இல் அதன் முழு உற்பத்தித் திறனை எட்டியது. இதனை அணையை கட்ட மொத்தம் 2 லட்சம் கோடி செலவானது.
இதில் ஆச்சரியப்பட வைக்கும் விஷயம் என்னவென்றால், பூமி ஒரு மணி நேரத்திற்கு 1674 கிலோ மீட்டர் வேகத்தில் சுழல்கிறது. ஆனால் பூமி 0.06 macro sec மெதுவாக சுற்றுவதற்கு இந்த Three Gorges Dam தான் காரணம் என ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது. ஏனெனில் அணை கட்டுவதற்கு முன்பு தண்ணீர் பல்வேறு இடங்களை ஆக்கிரமித்து இருந்தது. அதன்பிறகே இந்த பிரம்மாண்ட அணை கட்டப்பட்டது. இதன் நீர் தேக்கத்தால் பூமியின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டும் நிறை அதிகரிக்கிறது. எனவே பூமி சுற்றும் வேகம் குறைய இதுவே காரணம் என அறிவியல்பூர்வமான ஆய்வுகள் வெளியாகியுள்ளன.