Categories
அரசியல்

இனி பிரச்சனையே இல்லை…. மரம் ஏறும் ஸ்கூட்டர்…. விவசாயியின் அசத்தல் கண்டுபிடிப்பு….!!

இன்றைய காலகட்டத்தில் ஏராளமானோர் விவசாயம் செய்வதில் ஆர்வம் காட்டுவதில்லை. ஆனால் சில பட்டதாரி வாலிபர்கள் வெளிநாட்டில் கிடைக்கும் வேலைகளை விட்டு விவசாயத்தில் சாதித்து வருகின்றனர். பெண்கள் சிலர் விடா முயற்சியோடு விவசாயத்தை செய்து லாபம் ஈட்டி வருகின்றனர். விவசாயத்தில் தொழில்நுட்பம் முக்கிய பங்கு வகிக்கிறது. பல்வேறு தொழில்நுட்ப கருவிகள் கடினமான வேலைகளை எளிதாக செய்ய பயன்படுகிறது. இதனால் நேரமும் மிச்சமாகும். தற்போது தொழில்நுட்பத்தின் உச்சமாக விவசாயம் செய்வதற்கு பல்வேறு உபகரணங்களை கொண்டு பிரத்யேகமான கருவி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதில் ஓன்று மரம் ஏறும் ஸ்கூட்டர். இதுகுறித்து பின்பருமாறு காண்போம்.

கர்நாடக மாநிலத்தில் உள்ள மங்களூரில் விவசாயியான கணேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் அறிவியல் சார்ந்த பட்டப் படிப்பை படித்து முடித்துள்ளார். இவர் பாக்கு மரப்பண்ணை வைத்துள்ளார். இந்நிலையில் கணேஷ் உயரமாக இருக்கும் மரங்களில் ஏறுவதற்கு நிரந்தரமான ஒரு தீர்வாக Tree Climbing scooter-ஐ கண்டுபிடித்துள்ளார். பாக்கு மரங்களில் மருந்து அடிக்கும் வேலையை கணேஷ் பார்த்து வந்துள்ளார். அப்போது உயரமான மரங்களுக்கு மருந்து அடிக்கும் வேலையை ஒரு கருவி செய்கிறது. அப்படி என்றால் அதில் ஏறுவதற்கு ஏன் ஒரு கருவியை கண்டுபிடிக்க கூடாது என கணேஷ் நினைத்தார். பல்வேறு கட்ட முயற்சிகளுக்கு பிறகு 65 அடி உயரமுடைய மரங்களிலும் எளிதாக ஏறும் tree climbing scooter-ஐ கணேஷ் கண்டுபிடித்துள்ளார்.

Categories

Tech |