சோலார் பவர் என்பது சூரிய ஒளியில் இருந்து மின்னாற்றலை பெறுவதாகும். பகல் நேரங்களில் கிடைக்கும் சூரிய ஒளி மூலம் மின் ஆற்றலை மின்கலங்களில் சேமித்து அதனை இரவு நேரங்களில் பயன்படுத்தலாம். இதுவரை நாம் சோலார் கார், சோலார் வீடு போன்றவற்றை பற்றி கேள்விப்பட்டிருப்போம். ஆனால் தற்போது சீனாவில் சோலார் ரோடு போட்டுள்ளார்கள். சீனாவில் இருக்கும் சென்டம் புரோவின்சில் இருந்து இந்த ரோடு ஆரம்பமாகிறது. இந்த ரோடு சுமார் 1 கி.மீ தூரத்தில் 5875 சதுர மீட்டர் பரப்பளவில் உள்ளது. இந்த சோலார் ரோட்டின் மூலம் ஆண்டுக்கு 1GWh மின்சாரம் வரை உற்பத்தி செய்ய முடியும்.
இந்த ரோடு போடப்பட்ட முதல் 14 வாரங்களில் 96 மெகாவாட் ஆற்றல் உற்பத்தியானது. இந்நிலையில் சோலார் ரோடு மூலம் சீனாவில் இருக்கும் சுமார் 800 வீடுகளுக்கு மின்சாரம் விநியோகிக்க முடியும். ஆனால் தற்போது இந்த சோலார் ரோடில் இருந்து தயாரிக்கப்படும் மின்சாரம் சாலையோரம் இருக்கும் மின் விளக்குகள் மற்றும் சிசிடிவி கேமரா ஆகியவற்றுக்கு பயன்படுத்தப்படுகிறது. மிக விரைவில் சோலார் ரோடு சீனாவில் இருக்கும் பல்வேறு இடங்களில் போட திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் சீன அரசாங்கத்திற்கு அதிகளவு மின்சாரம் சேமிக்கப்படுகிறது.