ஜி.வி. பிரகாஷ் கல்லூரி விழாவில் சமீபத்தில் பங்கேற்றுள்ளார்.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராகவும், இசையமைப்பாளராகவும் வலம் வருபவர் ஜி.வி. பிரகாஷ். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. மேலும், இவர் நடிப்பில் சில திரைப்படங்கள் ரிலீசுக்கு காத்திருக்கின்றன. இதனையடுத்து, இவர் கல்லூரி விழாவில் சமீபத்தில் பங்கேற்றுள்ளார். அங்கு மாணவர்களின் கேள்விக்கு பதிலளித்து வந்தார்.
அப்போது ‘சினிமாவிற்கு வரவில்லை என்றால் என்னவாகி இருப்பீர்கள்?’ என கேள்வி கேட்டனர். அதற்கு பதிலளித்த ஜிவி பிரகாஷ், தனக்கு கிரிக்கெட்டில் அதிக ஆர்வம் இருப்பதாகவும், சினிமாவிற்கு வரவில்லை என்றால் நான் கிரிக்கெட்டர் ஆக முயற்சி செய்திருப்பேன் என கூறியிருக்கிறார்.