ஆந்திரப் பிரதேசம் மாநிலம் விஜயவாடாவில் மின்சார ஸ்கூட்டர் வாங்கிய ஒரே நாளில் வெடித்து சிதறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில் மூன்று பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆந்திரப் பிரதேசம் விஜயவாடாவை சேர்ந்த சிவக்குமார் என்பவர் நேற்று முன்தினம் புதிய ஸ்கூட்டர் ஒன்றை வாங்கியுள்ளார். இதனை நேற்று அதிகாலை அவர் வீட்டின் முன் அறையில் வாகனத்தை வைத்து சார்ஜ் போட்டு இருந்தார். அவருடைய குடும்பத்தினர் அனைவரும் தூங்க சென்று விட்டனர் .
அப்போது எதிர்பாராத விதமாக பேட்டரி திடீரென்று வெடித்து. இதை தொடர்ந்து வீட்டின் மின் வயர்கள் பற்றி எரிந்து புகை வெளியேறியது. இதனால் அறையில் மாட்டி கொண்ட அனைவர் மீதும் தீ பரவியது. இதில் சிவகுமார் உடல் கருகி உயிரிழந்தார். அவரது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் தீ விபத்தில் படுகாயமடைந்து அருகில் உள்ள மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளன. இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சமீப காலமாக தொடர்ந்து மின் ஸ்கூட்டர்கள் வெடித்து வருவது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.