Categories
மாநில செய்திகள்

கீழடியில் 8 ம் கட்ட ஆய்வு…. இரண்டு சில்லு வட்டுகள் கண்டுபிடிப்பு….!!!!!!!

கீழடியில் கடந்த பிப்ரவரி மாதம் 8-ம் கட்ட அகழாய்வு பணி தொடங்கியுள்ளது.

சிவகங்கை மாவட்டம் கீழடியில் மத்திய, மாநில அரசுகள் சார்பில் பல்வேறு கட்டங்களாக அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. இதுவரை அங்கு 7 கட்ட அகழாய்வுகள் நடந்து முடிந்திருக்கிறது. இதில் பானைகள், முதுமக்கள் தாழிகள், ஆபரண பொருட்கள் உள்பட பண்டைய தமிழர்கள் பயன்படுத்திய நூற்றுக்கணக்கான பழங்கால பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இதனை தொடர்ந்து கடந்த பிப்ரவரி மாதம் கீழடியில் 8-ம் கட்ட அகழாய்வு பணி தொடங்கியது.

இந்நிலையில் இதற்காக 5 குழிகள் தோண்டப்பட்டு அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றது. அதில் ஒரு குழியில் சுமார் 3 அடி ஆழத்தில் சிறுவர்கள் மற்றும் பெண்கள் விளையாடுவதற்காக பயன்படுத்திய 2 சில்லு வட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. கீழடியில் கண்டுபிடிக்கப்படும் பொருட்கள் அங்கு அமைய இருக்கும் அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

Categories

Tech |