Categories
மாநில செய்திகள்

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா…. மூன்று மண்டலங்களில் பாதிப்பு உயர்வு…!!!!!

சென்னை முழுதும் கொரோனா தொற்று பாதிப்பு இல்லை. குறிப்பிட்ட மண்டலங்களில் மட்டுமே, சற்று அதிகமான பாதிப்பு உள்ளதாக, மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.இரண்டாம் அலை தொற்று அதிகரித்த பின், சென்னையில் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டன.

இதனால், தினசரி 80 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சென்னையில் வாழ்ந்தாலும், தொற்று பரவல் கட்டுப்படுத்தப்பட்டு, கோவை, ஈரோடு மாவட்டங்களை விட, குறைவான பாதிப்பு கண்டறியப்பட்டது. தற்போது, பெரும்பாலான தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால், சென்னை மாநகராட்சியின் அடையாறு, தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் மண்டலங்களில் பாதிப்பு மீண்டும் அதிகரித்துள்ளது. நேற்றைய நிலவரப்படி சென்னையில் 36 பேருக்கு தொற்று  உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேநேரத்தில் அடையாறு மண்டலத்தில் 49 பேரும், தேனாம்பேட்டை மண்டலத்தில் 30 பேரும், கோடம்பாக்கம் மண்டலத்தில் 10 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Categories

Tech |