Categories
உலக செய்திகள்

அர்ஜென்டினாவில் மெகா பேரணி…. அதிபரை எதிர்த்து விவசாயிகள் போராட்டம்…!!!

அர்ஜென்டினாவில் அதிபரை எதிர்த்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் திரண்டு டிராக்டர் பேரணி நடத்திவருகிறார்கள்.

அர்ஜென்டினாவில் பணவீக்கம் ஏற்பட்டிருக்கிறது. அதனை கட்டுப்படுத்துவதற்காக விவசாய பொருட்களுக்கான விலையில் அதிபர் அல்பெர்டோ பெர்னான்டஸ் தலையிடுவது விவசாயத் துறைக்கு எதிராக இருக்கிறது என்று விவசாயிகள் தெரிவித்த நிலையில், தற்போது மக்கள் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள்.

அந்நாட்டின் தலைநகரான பியுனல் ஏர்ஸ் சாலையில் இருக்கும் அதிபர் மாளிகை பகுதியில் டிராக்டர் பேரணி நடத்தப்பட்டுள்ளது. வரி விதிப்பு தொடர்பில் அதிபர் மேற்கொண்ட தீர்மானத்தை திரும்பப் பெற வேண்டும் என்று கோரி விவசாயிகள் ஆயிரக்கணக்கில் திரண்டு கொடிகளுடன் மிகப்பெரிய பேரணியை நடத்திவருகிறார்கள்.

Categories

Tech |