Categories
உலக செய்திகள்

குர்து இன போராளிகள் மீது துருக்கி ராணுவம் தாக்குதல்….!! 45 பேர் பலியானதாக தகவல்….!!

ஈராக், ஈரான், சிரியா மற்றும் அர்மேனியா போன்ற நாடுகளில் எல்லை பகுதிகளில் வசிப்பவர்கள் குர்து மொழி பேசும் குர்திஷ்கள். இவர்கள் தாங்கள் வசிக்கும் பகுதியை குர்திஸ்தான் எனும் தனி தேசமாக உருவாக்க இவர்களுடைய போராட்ட குணம் மிக்க அமைப்பான குர்திஸ்தான் தொழிலாளர் கட்சி பல வருடங்களாக போராடி வருகிறது.

ஆனால் இதனை விரும்பாத துருக்கி அரசு இந்த அமைப்பை தீவிரவாத அமைப்பு என அறிவித்துள்ளது. இந்நிலையில் ஈராக் நாட்டின் வடக்கு பகுதியில் குர்து இன போராளிகளின் கூடாரங்கள் மீது தரை மற்றும் வான்வழியாக துருக்கி ராணுவம் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் 45 குர்து இன போராளிகள் கொன்று குவிக்கப்பட்டதாகவும் துருக்கி அதிபர் தயீப் எர்டோகன் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |