புதிய பள்ளி கட்டிடம் கட்டித் தருமாறு பொதுமக்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தியாகதுருகம் அருகே சு.ஒகையூர் கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்தப் பள்ளியில் சுமார் 750-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த வளாகத்தில் சுமார் 6 கட்டிடங்கள் அமைந்துள்ளது. இதில் 3 கட்டிடங்கள் பழுதடைந்ததால் 6-ம் வகுப்பு மற்றும் 7-ம் வகுப்பு மாணவர்கள் மரத்தடியில் அமர்ந்து படிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் மழை நேரங்களில் மாணவர்கள் ஒரே வகுப்பறையில் அமர வைக்கப்படுவதால் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. எனவே மாணவர்களின் நலன் கருதி புதிய பள்ளி கட்டிடம் கட்டித் தருமாறு பொதுமக்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.