ஆப்கானிஸ்தானில் டிக் டாக் மற்றும் பப்ஜி போன்ற செயலிகளுக்கு தடை விதிக்கப்படுவதாக தலிபான்கள் அறிவித்துள்ளனர்.
ஆப்கானிஸ்தான் நாட்டை தலிபான்கள் கைப்பற்றியதிலிருந்து, அந்நாட்டில் கடும் கட்டுப்பாடுகளை விதித்து வருகிறார்கள். அதில் முக்கியமாக பெண்களை கல்வி கற்க, அனுமதிக்காதது சர்வதேச அளவில் கடும் சர்ச்சைகளை கிளப்பியுள்ளது. இந்நிலையில் பொழுதுபோக்கு அடக்குமுறை எனப்படும் விதத்தில் டிக் டாக், பப்ஜி போன்ற செயல்களை தடை செய்துள்ளார்கள்.
இந்த செயலிகள், இளைஞர்கள் வழி மாறி செல்லும் விதத்தில் உள்ளது என்று தலீபான்கள் கூறியுள்ளனர். இதற்கு முன்பே அங்கு பொழுதுபோக்கு அம்சங்களுக்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது, என்பது குறிப்பிடத்தக்கது. தலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய பின், வாழ்க்கை தரம் மிகவும் மோசமாக உள்ளது என்று அந்நாட்டை சேர்ந்த 94% மக்கள் கூறியுள்ளனர்.