Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“விக்ரம் பல கெட்டப்களை போடும் காட்சிகள்”… வீடியோ வெளியாகி வைரல்…!!!!

விக்ரம் நடிக்கும் கோப்ரா திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள அதிராம் பாடல் வெளியாகி ட்ரெண்டாகி வருகின்றது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகின்றவர் விக்ரம். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த மகான் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதால் தற்போது அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடித்திருக்கும் கோப்ரா திரைப்படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றார்கள்.

கோப்ரா திரைப்படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்பாக முடிவடைந்து இருப்பதாக படக்குழு அறிவித்திருந்தார்கள். இந்நிலையில் இந்த படத்தில் இடம்பெற்றுள்ள அதீரா பாடல் வெளியாகி ட்ரெண்டாகி வருகின்றது. இத்திரைப்படத்தில் விக்ரம் பல கெட்டப்புகளில் மிரட்டியிருக்கின்றார். தற்போது வெளியான அதீரா பாடலில் பல கெட்டப்களை போடும் விக்ரமின் காட்சிகள் இடம் பெற்றிருக்கின்றன.

Categories

Tech |