கடந்த வாரம் தென் ஆப்பிரிக்காவின் குவாசலு-நடால் மாகாணத்தில் கனமழை பெய்தது. இதனால் அங்குள்ள பல்வேறு பகுதிகளையும் வெள்ளம் சூழ்ந்ததோடு, நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. மேலும் வெள்ளத்தில் சிக்கி காணாமல் போனவர்களை தேடும் பணியும் தீவிரமாக நடந்து வருகிறது. இதுவரை வெள்ளத்தால் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் 395 பேர் இதுவரை வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல் வெள்ளப்பெருக்கில் காணாமல் போன 50க்கும் மேற்பட்டவர்களை தேடும் பணி 5-வது நாளாக தொடர்ந்து நடந்து வருகிறது.