திமுக ஆட்சிக்கு வந்தாலே சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாகிவிடும் என்பதை உணர்த்தும் வகையில் அடுத்தடுத்த சம்பவங்கள் நடந்து வருகிறது என அமமுக பொதுச் செயலாளர் டி டி வி தினகரன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது: ” திருநெல்வேலி அருகே காவல்துறை உதவி ஆய்வாளர் செல்வி.மார்கரெட் தெரசா கழுத்து அறுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியளிக்கிறது.
மக்களுக்கு பாதுகாப்பு வழங்கும் பணியிலிருந்த காவல்துறை அதிகாரிக்கே பாதுகாப்பு இல்லாவிட்டால், அவர்களால் மக்களை எப்படி பாதுகாக்க முடியும்? தி.மு.க. ஆட்சிக்கு வந்தாலே சட்டம்-ஒழுங்கு கேள்விக்குறியாகிவிடும் என்பதை அடுத்தடுத்த சம்பவங்கள் உண்மையாக்கி வருகின்றன. காவல் துறையைக் கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்?” என அந்த பதிவில் கேள்வி எழுப்பியுள்ளார்.