Categories
மாநில செய்திகள்

மாணவியை காதலித்த வாலிபர்…. ஆத்திரத்தில் அத்தை மகனின் வெறிச்செயல்…. பெரும் பரபரப்பு…..!!!!!

தஞ்சாவூர் அடுத்த வாளமர் கோட்டை வாண்டையார் தெருவில் முத்துகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் ஆனந்த்(21). ஐடிஐ படித்து முடித்துள்ளார். இவர் அதே பகுதியில் வசித்து வரும் பிளஸ் 2 மாணவியை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இம்மாணவி ஆனந்திற்கு தங்கை உறவு முறையாகும். இதன் காரணமாக ஆனந்தை அந்த மாணவியின் பெற்றோர் கண்டித்தனர். எனினும் அவர் யார் சொல்வதையும் கேட்காமல் தொடர்ந்து அந்த மாணவியை காதலித்து வந்துள்ளார். இதனை அறிந்த சூரக்கோட்டையை சேர்ந்த அம்மாணவியின் அத்தை மகனான உதயகுமார் (25) மிகுந்த ஆத்திரமடைந்தார். அதன்பின் அவர் ஆனந்திடம் இந்த பழக்கம் தவறானது என்றும் மாணவியை தொல்லை செய்யாமல் அவளை விட்டு விலகிவிடுமாறும் தெரிவித்துள்ளார். இதனால் அவர்கள் இருவருக்கும் இடையில் வாய்த்தகராறு ஏற்பட்டது.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு கல்லணைக்கால்வாய் படித்துறையில் ஆனந்த் அமர்ந்திருந்தார். இத்தகவலை அறிந்த உதயகுமார் சம்பவ இடத்திற்கு சென்று, தன் அத்தை மகளை காதலிப்பதை கைவிடக்கோரி மீண்டும் வலியுறுத்தியுள்ளார். இதன் காரணமாக இருவருக்கும் இடையில் மீண்டுமாக வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த உதயகுமார் மண்வெட்டி கட்டையால் ஆனந்தின் பின்தலை மற்றும் முகத்தில் சரமாரியாக அடித்துள்ளார். அதன்பின் ரத்தவெள்ளத்தில் மயங்கி விழுந்த ஆனந்தை அப்பகுதியை சேர்ந்த சிலர் பார்த்து தஞ்சை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி ஆனந்த் உயிரிழந்து விட்டார். இது தொடர்பாக தஞ்சை தாலுகா காவல் நிலையத்தில் முத்துகிருஷ்ணன் கொடுத்த புகாரின்படி போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) கார்த்திகேயன் வழக்குப்பதிவு செய்து உதயகுமார் மற்றும் மாணவியின் தந்தை ரவி (52) ஆகிய இருவரையும் கைது செய்தார். அவ்வாறு கைதான இருவரிடமும் காவல்துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |