சீன பிரதமர், இலங்கை பிரதமரான மகிந்த ராஜபக்சேவுடன் தொலைபேசியில் பேசி உதவி வழங்குவதாக கூறியதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இலங்கை கடும் நிதி நெருக்கடியில் தவித்துக் கொண்டிருக்கும் நிலையில், இலங்கையின் சீன தூதராக இருக்கும் ஜி ஜெங்காங், இலங்கையின் வெளியுறவுத்துறை மந்திரியான ஜி.எல்.பெரீசை கடந்த வியாழக்கிழமை அன்று சந்தித்திருக்கிறார். அப்போது இலங்கைக்கு, சீனா உதவி வழங்குவது குறித்து பேசியிருக்கிறார்.
இந்நிலையில் சீன பிரதமரான லி கேகியாங்கிடம் நேற்று இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்சே தொலைபேசியில் பேசியுள்ளார். இது பற்றி மஹிந்த ராஜபக்ஷ தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, சீன பிரதமருடன் ஏற்பட்ட உரையாடல் ஆக்கபூர்வமாக உள்ளது. இலங்கை மக்களின் அத்தியாவசிய தேவைகளுக்கு உதவி வழங்க உறுதி அளித்திருக்கிறார். தங்களுடனான நீண்டகால நட்பிற்காக நன்றி கூறியிருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.