பெண்கள் மீதான ஈர்ப்பு அதிகமாக இருக்கின்றது என நடிகை சாய் பல்லவி கூறியுள்ளார்.
தெலுங்கு சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கின்ற சாய்பல்லவி தனது நடிப்பு மற்றும் நடன மூலம் ரசிகர்களை கவர்ந்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்திருக்கின்றார். இவர் மலையாள திரைப்படமான பிரேமம் திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். இவர் தமிழில் மாரி 2, என் ஜி கே ஆகிய திரைப்படங்களில் நடித்து இருக்கின்றார்.
இந்நிலையில் அவர் கூறியுள்ளதாவது, “தனக்கு பெண்கள் மீதான ஈர்ப்பு அதிகமாக இருக்கின்றது. பெண்களைத்தான் அதிகமாக சைட் அடிப்பேன். அவர்கள் போடும் உடை, அலங்காரம், முடி என எல்லாவற்றையும் ரசிப்பேன். பாய்ஸ் எப்பவுமே அதே சர்ட், பேண்ட் தான். அதனால அவங்களை பெருசா சைட் அடிப்பது இல்லை. எனக்கு லவ் அட் ஃபர்ஸ்ட் சைட் இதுவரைக்கும் நம்பிக்கை இல்ல. அந்த மாதிரி யாரும் என்னை இம்ப்ரெஸ் செய்ததும் இல்லை” என சாய்பல்லவி கூறியுள்ளார்.