Categories
அரசியல்

பவர் கட்டுக்கு இதுதான் காரணமாம்…. அண்ணாமலை வெளியிட்ட அதிர்ச்சி தகவல்…!!!!!!

தமிழ்நாட்டில் மின்தட்டுப்பாட்டிற்கான காரணம் குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.

கோடை காலம் தொடங்கிய உடன் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மின்வெட்டு பிரச்சனை தலையெடுத்துள்ளது. விடியல் அரசு என்று சொல்லிவிட்டு நள்ளிரவில் பவர் கட் செய்வதால் எப்படா பொழுது விடியும்  என மக்கள் அன்றாடம் தூக்கம் இல்லாமல் தவித்து வருகின்றனர் என்று, விடியல் பரிதாபங்கள் என்ற தலைப்பில் சில தினங்களாக சோஷியல் மீடியாக்களில் மீம்ஸ்கள் திரையிடப்பட்டு வருகிறது.

இவை ஒரு புறம் இருக்க, மற்றொரு புறம் தமிழ்நாட்டில் மின்வெட்டு ஏற்படுவதற்கான காரணம் குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர்  வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், செயற்கையாக மின் பற்றாக்குறையை உருவாக்கி மக்களை துயரத்தில் தள்ளுவதில் வல்லவர்கள் திமுக. 2017 ஆம் ஆண்டிலிருந்து இல்லாத மின் தட்டுப்பாடு தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த நாள் முதல் இந்த நாள் வரை இருக்கிறது. இதற்கான காரணத்தை கண்டறிந்து முதல்வர் மக்களுக்கு விளக்கமளிக்க வேண்டும்.

மேலும் தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் நிலக்கரி தட்டுப்பாடு ஏற்பட்டதால் மின் விநியோகம் தடைபட்டதாக  தங்களது குடும்ப நாளிதழின் மூலம் கூறுவது சுத்தப் பொய்TTPSஇல் ஏப்ரல் 20ஆம் தேதி அன்று 5 நாட்களுக்கு நிலக்கரி இருப்பு இருந்தது; பற்றாக்குறை எங்கே? ஏப்ரல் 20ஆம் தேதி அன்று ஒரே நாளில் 4 யூனிட்கள் பராமரிப்பு பணிகளுக்காக நிறுத்திவைக்கப்பட்டன.

மேலும் ஆலையை 5 நாட்களுக்கு இயக்க போதுமான நிலக்கரி கையிருப்பிலிருந்த நிலையில், TTPSல் உள்ள 3 யூனிட்கள் ஒரே நாளில் நிறுத்தப்பட்டதன் காரணத்தை முதல்வர் விளக்குவார் என்று நம்புவோமாக’ என தமது ட்விட்டர் பதிவில் அண்ணாமலை கூறியுள்ளார்.இதற்கிடையே ‘கடந்தாண்டு மட்டும் செயற்கை மின்வெட்டை உருவாக்கி அதன் மூலம் தனியாரிடமிருந்து அதிக விலைக்கு மின்சாரம் வாங்கி 2000 கோடி தனியார் வசம் போயிருக்கிறது’ என்று தான் வெளியிட்டுள்ள அறிக்கையில் அண்ணாமலை பகிரங்கமாக குற்றம்சாட்டியிருக்கிறார்.

Categories

Tech |