Categories
மாநில செய்திகள்

4 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை…… 19 வயது இளைஞர் வெறிச்செயல்…..!!!!

சென்னை திருவிக நகரை சேர்ந்த ஆகாஷ் என்ற 19 வயது வாலிபர் பக்கத்து வீட்டை சேர்ந்த 4 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுதொடர்பாக குழந்தையின் தாய் புகார் அளித்த புகாரின் பேரில் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் கடந்த 2020ம் ஆண்டு நடந்தது. இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றம் விசாரித்தது.

வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்ற நீதிபதி எம்.ராஜலட்சுமி, ஆகாஷ் மீதான குற்றச்சாட்டுக்களை காவல் துறையினர் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபித்துள்ளதாக கூறி, அவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். அபராததொகையை பாதிக்கப்பட்ட குழந்தையின் குடும்பத்துக்கு வழங்க உத்தரவிட்ட நீதிபதி, அவருக்கு 5 லட்சம் ரூபாயை இழப்பீடாக ஒரு மாதத்தில் வழங்க தமிழக அரசுக்கும் உத்தரவிட்டுள்ளார்.

Categories

Tech |