Categories
உலக செய்திகள்

பிரான்சில் இறுதிக்கட்ட அதிபர் தேர்தல்….!! நிறைவு பெற்றது பிரச்சாரம்….!!

பிரான்சில் அதிபர் பதவிக்கான தேர்தல் கடந்த 10ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் தற்போதைய பிரதமர் இமானுவேல் மேக்ரான் மற்றும் தீவிர வலதுசாரி கொள்கையுடன் செயல்படும் மரினே லீ பென் உட்பட 12 பேர் போட்டியிட்டனர். இதில் மேக்ரான் 27.8 சதவீத வாக்குகளும் மரினே லீ பென் 23.2 சதவீத வாக்குகளும் பெற்றிருந்தனர். இந்நிலையில் யாரும் 50 சதவீதத்திற்கு மேல் வாக்குகள் பெறாத நிலையில் முதல் இரண்டு இடங்களை பிடித்த மைக்ரானுக்கும் மரினேவுகுக்கும் வரும் ஞாயிற்றுக்கிழமை இறுதிக்கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் கடந்த வெள்ளிக்கிழமையுடன் முடிவடைந்தது.

Categories

Tech |