சென்னை தரமணியில் சிஎஸ்ஐஆர் வளாகத்தில் நடைபெற்ற அம்பேத்கரின் 131 வது பிறந்த நாள் விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழிசை சௌந்தரராஜன் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர் அம்பேத்கரின் சிறப்புகள் குறித்து உரையாற்றினார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்து அம்பேத்கரின் அனைத்து கருத்தும் மதிக்கப்பட வேண்டும் என்று கூறியவர் அப்படி இருக்கும்போது அம்பேத்கர் குறித்து கருத்து தெரிவித்தால் விமர்சிப்பது அம்பேத்கர் வலியுறுத்திய கருத்து சுதந்திரத்திற்கு உகந்தது அல்ல என்று கூறினார். மேலும் ஒருவர் கருத்தைக் கூறினால் அதை கருத்து சுதந்திரமாக கருதி ஏற்க வேண்டுமே தவிர, அதனை விமர்சிக்க கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Categories
கருத்து சுதந்திரம் வேண்டும்….. இளையராஜாவுக்கு ஆதரவளித்த கவர்னர் தமிழிசை…..!!!!
