பிஎஸ்என்எல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு அவ்வப்போது பல்வேறு சலுகைகளுடன் கூடிய புதிய திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. அதன்படி பிஎஸ்என்எல் நிறுவனம் அதன் புதிய ப்ரீபெய்டு திட்டத்தின் மூலம் ஜியோ மற்றும் மிரட்டல் ஆகிய நிறுவனங்களுக்கு டஃப் கொடுத்துள்ளது. 60 நாட்களுக்கு 397 ரூபாய் கொடுத்தால் ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் கால், 100 எஸ்எம்எஸ், மேலும் யூரோஸ் நவ் ஓடிடி தள சப்ஸ்கிரிப்ஷன் ஆகியவை வழங்கப்படுகிறது. ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் அதன் கட்டணத்தை உயர்த்திய நிலையில் பிஎஸ்என்எல் 397 ரூபாய் திட்டம் பயனர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெறுவதாகக் கூறப்படுகிறது.
