Categories
உலகசெய்திகள்

கொரோனா பரவல் எதிரொலி…. பிரபல நாட்டில் மீண்டும் முழு ஊரடங்கு நீட்டிப்பு…!!!!!!

சீனாவில் கொரோனா மீண்டும் அதிகரிக்க தொடங்கியதன் காரணமாக முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் கொரோனா பாதிப்பின் தீவிரம் குறைந்திருக்கிறது.  ஆனால், சீனாவில் இதற்கு நேர்எதிராக  ஒமைக்ரான் பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து காணப்படுகின்றது. இந்தநிலையில் சீனாவின் ஷாங்காய் நகரில், ஒரு சில பகுதிகளில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்ததால் அங்கு முழு ஊரடங்கு  நீட்டிக்கப்பட்டிருக்கிறது. ஷாங்காய் நகரில் கடந்த மாதம் கொரோனா பாதிப்புகள் கட்டுக்கடங்காமல் உயர்ந்துள்ளன. இதனையடுத்து இந்தமாதம் தொடக்கம் முதல் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.
மேலும் வருமான இழப்பு மற்றும் உணவு தட்டுப்பாடால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்ட போதிலும், நகரின் பல்வேறு பகுதிகளில் எவருக்கும் கொரோனா பாதிப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். மேலும், டெஸ்லா உள்பட ஏராளமான தொழிற்சாலைகள் மீண்டும் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டது. இந்நிலையில், ஒரு சில பகுதிகளில் கொரோனா பாதிப்புகள் சற்று அதிகரித்ததால், முழு ஊரடங்கு நீட்டிக்கப்படும் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Categories

Tech |