Categories
உலக செய்திகள்

சூப்பர்…. செவ்வாய் கிரகத்தில் ஹெலிகப்டரா….? சரித்திரம் படைத்த நாசா….!!

நாசா செவ்வாய்க் கிரகத்தில் சிறிய அளவிலான ஹெலிகாப்டரை பறக்கவிட்டு சரித்திரம் படைத்துள்ளது.

அமெரிக்க நாட்டின் விண்வெளி  ஆராய்ச்சி நிறுவனமான நாசா செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக கடந்த 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பெர்சவரன்ஸ் ரோவரை அனுப்பியுள்ளது.  இந்த  பெர்சவரன்ஸ் ரேவரானது  செவ்வாய் கிரகத்தை  படம் பிடித்து பூமிக்கு அனுப்புவது, மண் துகள்கள் போன்ற மாதிரிகளையும்  சேகரித்து வருகிறது.

மேலும் பெர்சவரன்ஸ் ரேவருடன் சிறிய அளவிலான ஹெலிகாப்டர் ஒன்று இணைத்து அனுப்பப்பட்டது. இந்த சிறிய அளவிலான 1.8 கிலோ எடையுள்ள ஹெலிகாப்டருக்கு இன்ஜெனியூனிட்டி எனப் பெயரிடப்பட்டுள்ளது.  இந்த  ஹெலிகாப்டரானது கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி செவ்வாய்    கிரகத்தின் மேற்பரப்பில்  இருந்து 10 அடி உயரத்தில் வெற்றிகரமாகப் பறந்து சரித்திரம் படைத்தது. மேலும்  பூமியைத்  தவிர மற்றொரு கிரகத்தில், முதன்முதலாக ஹெலிகாப்டரை இயக்கி நாசா வரலாற்று சாதனை படைத்தது.

Categories

Tech |