தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில் கடந்த மாதம் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் தமிழகத்தில் உள்ள அனைத்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் தயார் நிலையில் வைத்திருக்க மருத்துவ கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.
படுக்கைகள், மருத்துவ உபகரணங்கள், ஆக்சிஜன் வசதிகள், மருந்துகள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்களை தயார் நிலையில் வைக்க வேண்டும். அனைத்து சுகாதார பணியாளர்களும் முகக்கவசம் அணிய வேண்டும். மருத்துவ கல்லூரி வளாகத்தில் பெரிய அளவில் மாணவர்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.