சசிகலா விடுதலை ஆவதும் ஆகாததும் எந்த விதத்திலும் பாதிக்காது என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னை திருவேற்காட்டில் தொழிற்சாலைகள், கல்வி நிறுவனங்கள், துணி வணிக நிறுவனங்கள் மற்றும் வங்கி நிர்வாகிகளுடன் கருத்துக்கேட்பு மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பங்கேற்று நிர்வாகிகளுடன் குறைகளை கேட்டறிந்து அதற்கான தீர்வுகளை எடுத்துரைத்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் சசிகலா விடுதலை குறித்து கூறியது ராஜேந்திர பாலாஜியின் சொந்த கருத்தாக இருக்கலாம் எனவும், சசிகலா விடுதலை ஆவதும் ஆகாததும் தம்மை எந்தவிதத்திலும் பாதிக்காது எனவும் கூறினார்.