கனடாவின் Saskatchewan மாகாணத்தை சேர்ந்தவர் Pearl Thomas இவர் ஒரு லாட்டரி சீட்டு வாங்கியுள்ளார். அந்த லாட்டரி சீட்டில் இவருக்கு 10,000 டாலர் பரிசு தொகை கிடைத்துள்ளது. ஆனால் Pearl அந்த சீட்டில் உள்ள எண்களை நன்றாக சரி பார்த்த பிறகுதான் தெரிந்துள்ளது அவர் ஒரு பூஜியத்தை கவனிக்காமல் விட்டுள்ளார். ஏனென்றால் Pearl க்கு இந்த லாட்டரியில் 10000 டாலர் கிடைக்கவில்லை மாறாக ஒரு லட்சம் டாலர் பரிசாக கிடைத்துள்ளது. இதனையடுத்து செய்வதறியாது திகைத்த அவர் தன்னுடைய பிள்ளைகளுக்கு போன் மூலம் தகவலை சொல்ல முடிவெடுத்து போன் செய்துள்ளார்.
ஆனால் அவருக்கு அளப்பரியத ஆனந்தத்தில் கண்ணீர் வந்துள்ளது. இதனால் போனில் பிள்ளைகளிடம் கண்ணீர்விட்டு அழுதிருக்கிறார் அவருடைய பிள்ளைகள் தாய் அழுவது கண்டு ஏதோ தவறான விஷயம் நடந்து விட்டதாக எண்ணி கவலையடைந்து பதறி உள்ளனர். பின்னர்தான் தெரிந்துள்ளது தாய் லாட்டரியில் பணம் விழுந்ததை எண்ணி ஆனந்தக் கண்ணீர் வடித்தார் என்பது. இதுகுறித்து Pearl கூறுகையில் இத்தனை பெரிய தொகையை என்ன செய்வது என்று இன்னும் திட்டமிடவில்லை என கூறியுள்ளார்.