ரோஷினி ஹரிப்ரியன் லேட்டஸ்ட் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார்.
சின்னத்திரையில் நிறைய சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியல்களில் ஒன்று ”பாரதி கண்ணம்மா”. இந்த சீரியலில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ரோஷ்னி ஹரிப்ரியன். இவர் சில காரணங்களால் இந்த சீரியலில் இருந்து சமீபத்தில் விலகினார்.
தற்போது இவர் ”குக் வித் கோமாளி” நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு வருகிறார். இந்நிலையில், சமூக வலைதளப் பக்கத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் அவர் அவ்வப்போது தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருவார். அந்த வகையில் தன்னுடைய லேட்டஸ்ட் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார்.
https://twitter.com/roshniharipriya/status/1517330217026564096