Categories
உலக செய்திகள்

விமான பயணியை தாக்கிய குத்துச்சண்டை வீரர்…. எதற்காக தெரியுமா?… வைரல் வீடியோ……!!!!!!

முன்னாள் குத்துச்சண்டை வீரர் மைக்டைசன். இவர் சான்பிரான்ஸ்கோ விமானம் நிலையத்திலிருந்து புறப்பட்ட ஒரு விமானத்தில்பயணம் மேற்கொண்டார். அப்போது அவருக்கு பின் சீட்டில் உட்கார்ந்திருந்த நபர் ஒருவர் தொடர்ந்து மைக் டைசனை தொந்தரவு செய்வது போன்று பேசிகொண்டே இருந்தார். இதன் காரணமாக கோபமடைந்த மைக் டைசன் தனது சீட்டில் இருந்து எழுந்து, பின் இருக்கையில் இருந்த பயணியின் முகத்தில் சராமாரியாக தாக்குகிறார். இதையடுத்து முகத்தின் ரத்த காயத்துடன் அந்த பயணி சில முக பாவனைகளை சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக சகபயணிகள் கூறியதாவது, “மைக்டைசன் அப்பயணியிடம் அமைதியாக வருமாறு கூறிவந்தார். ஆனால் அந்த பயணியோ அவரை தொல்லை செய்தபடியும், காதில் கத்தியபடியும் இருந்தார். இதனால் தான் டைசன் அவரை தாக்கிவிட்டார். அதனை தொடர்ந்து விமானம் புறப்படுவதற்கு முன்பு மைக்டைசன் அதிலிருந்து வெளியேறி விட்டார்” என தெரிவித்துள்ளனர். மைக்டைசன் முன்பே அவரது வன்முறை நடவடிக்கைகளுக்கு பெயர்போனவர் ஆவார்.

Categories

Tech |