Categories
மாநில செய்திகள்

தமிழக காவல்துறையில்…18 உதவி ஆணையர்கள் பணியிடமாற்றம்… வெளியான உத்தரவு…!!!!!!

தமிழக காவல்துறையில் 18 உதவி ஆணையர்களை பணி இடமாற்றம் செய்து தமிழக காவல்துறையின் தலைமை இயக்குனர் சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்

தமிழக காவல் துறையில் நிர்வாக வசதிக்காகவும், விருப்பத்தின் அடிப்படையிலும், பணியில் ஒழுங்கீனமாக இருந்தாலும் காவல்துறை அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றார்கள். அதன்படி தமிழக காவல்துறையில் 18 காவல் உதவி ஆணையர்களை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு காவல் துறையின் தலைமை இயக்குனர் சைலேந்திரபாபு புதன்கிழமை உத்தரவிட்டிருக்கிறார்.

இதில் முக்கியமாக சென்னை கிண்டி உதவி ஆணையர் ஜி.புகழ்வேந்தன் மீனம்பாக்கத்திற்கும்,  மீனம்பாக்கம் உதவி ஆணையர் ஆர்.அர்னால்டு எஸ்தர் ஆவடி மாநகர காவல்துறையின் ஆவண பாதுகாப்பு பிரிவிற்கும், சென்னை பெருநகர காவல்துறையின் நுண்ணறிவுப் பிரிவு உதவி ஆணையர் சி. சார்லஸ் சாம் ராஜதுரை ராயப்பேட்டைக்கும், ராயப்பேட்டை உதவி ஆணையர் எஸ் லட்சுமணன் ராயபுரத்தில் பணியிட மாற்றம் செய்யப் பட்டிருக்கின்றனர்.மேலும்  பணியிட மாற்றம் செய்யப்பட்ட அனைத்து அதிகாரிகளும்  புதிய பொறுப்புகளை ஓரிரு நாட்களில் ஏற்பார்கள் என காவல்துறை வட்டாரத்தில் கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |