Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“கோடை மழை” பூத்துக்குலுங்கும் காபி செடிகள்…. மகிழ்ச்சியில் விவசாயிகள்…!!!

காபி செடிகள் பூத்துக் குலுங்குவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் விவசாயிகளின் முக்கிய தொழிலாக தேயிலை விவசாயம் நடைபெற்று வருகிறது. இங்குள்ள கோத்தகிரி மற்றும் அதை சுற்றியுள்ள செம்மனாரை, கரிக்கயூர், குஞ்சப்பனை, கீழ்தட்டபள்ளம், அரவேனு போன்ற கிராமங்களில் ஆதிவாசி மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் காபி செடிகளை ஊடுபயிராக சாகுபடி செய்கின்றனர். இங்கு ரொபஸ்டா மற்றும் அரபிக்கா என்ற 2 விதமான செடிகள் பயிரிடப்படுகிறது. இந்த செடிகளில் ஆண்டுக்கு 2 முறை சாகுபடி செய்யலாம். இந்த செடிகளில் மே மற்றும் டிசம்பர் மாதங்களில் சாகுபடி நடைபெறும். இந்நிலையில் விவசாயிகள் டிசம்பர் மற்றும் ஜனவரி மாதத்தில் சாகுபடி செய்துள்ளனர்.

தற்போது நீலகிரியில் உள்ள பல இடங்களில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது. இதனால் காபி செடிகளில் அதிக அளவில் பூக்கள் காணப்படுகிறது.  இதன் காரணமாக விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து விவசாயி ஒருவர் கூறுகையில், ஒரு காபி செடியில் விளைச்சல் நன்றாக இருந்தால் 8 கிலோ வரை பழங்கள் கிடைக்கும். இதனையடுத்து உலர‌ வைக்காத காபி பழங்கள் 30 ரூபாய்க்கும், ஓரளவு உலர்ந்த காபி விதைகள் 80 ரூபாய்க்கும், நன்கு உலர்ந்த தரமான காபி விதைகள் 140 ரூபாய்க்கும் கொள்முதல் செய்யப்படுகிறது. மேலும் கோடை மழையின் காரணமாக  செடிகள் பூத்துக் குலுங்குவதால் விளைச்சல் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறியுள்ளார்.

Categories

Tech |