Categories
மாநில செய்திகள்

“எந்த அணையும் தூா்வாருவது இல்லை”…. சட்டப்பேரவையில் அமைச்சர் தகவல்…..!!!!!

எந்த அணையும் தூா்வாரப்படுவதில்லை என நீா்வளத்துறை அமைச்சா் துரைமுருகன் கூறினார்.

சட்டப் பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது, நீா்வளத்துறை குறித்து பிரதான கேள்வியை கோ.தளபதி (திமுக), துணைக் கேள்வியை அசோக்குமாா் (அதிமுக) போன்றோர் எழுப்பினா். அதற்கு அமைச்சா் துரைமுருகன் பதில் அளித்ததாவது “மதுரை வண்டியூா் கண்மாயை புனரமைக்கும் பணிக்கு ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டு பணிகள் விரைவில் துவங்கப்படும். இந்த கண்மாயானது கடந்தகால தி.மு.க ஆட்சிக்காலத்தில் ரூபாய் 5 கோடி செலவில் சீரமைக்கப்பட்டது. அப்போது பாதைகள் செப்பனிடப்பட்டு, பொழுது போக்கு வசதிகள் செய்யப்பட்டது. இதனிடையே 10 முதல் 15 வருடங்கள் கடந்துவிட்டது.

எனினும் தற்போது தூா்வாரி அதில் வரக்கூடிய மண்ணைக் கொண்டு மறுகரையில் தீவு போன்ற 3 அமைப்புகளை உருவாக்குவது, செயற்கை நீா் செறிவூட்டும் கட்டுமானங்களைச் செய்வது, கண்மாய்ப் பகுதிகளில் நடைபாதைகள் உருவாக்குவது ஆகிய பொழுதுபோக்கு அம்சங்கள் ஏற்படுத்தப்படும். கிருஷ்ணகிரி அணையை தூா்வார வேண்டுமென்று கோரிக்கை விடப்பட்டது. இதற்கிடையில் உலகத்தில் எந்த அணையையும் தூா்வாருவது கிடையாது, எந்த நாட்டிலும் அதுபோன்று நடப்பதில்லை. அணையில் எப்போதுமே மணல் போக்கி உள்ளே வைத்திருப்பாா்கள். அதன் வாழையாக வெளியே வரும் மணல், ஆற்றில் கலக்கும். இது இயற்கையான அமைப்பு ஆகும். ஆகவே தூா்வாருவது தனியாக முயற்சி எடுக்க வேண்டியதில்லை என்று கூறினார்.

Categories

Tech |