Categories
மாநில செய்திகள்

“வெப்பநிலை அதிகரிப்பு”….. இதுதான் காரணம்?…. வெளியான தகவல்……!!!!!!

விவசாயப் பரப்பும், நீராதாரங்கள் குறைந்து வருவதுமே  வெப்பநிலை அதிகரிப்புக்கு காரணம் என்று கோவை வேளாண் பல்கலையின் வேளாண் காலநிலை ஆராய்ச்சி மைய தலைவர் ராமநாதன், உதவி பேராசிரியர் தீபாகரன் தெரிவித்தனர். இது குறித்து அவர்கள் கூறியிருப்பதாவது, “வேளாண் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் கீதாலட்சுமி வெப்பநிலை மாற்றம் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டுள்ளார். சென்ற 10 ஆண்டு ஆய்வின் வாயிலாக அடுத்த 10 வருடங்களில் ஒருடிகிரி செல்சியஸ்அளவு வெப்பமானது அதிகரிக்கும். கடந்த 1980-களை ஒப்பிடுபோது தற்போது 0.5டிகிரி செல்சியஸ் அதிகரித்துள்ளது. ஆகவே இது பூமியின் வெப்பம் அதிகரிக்கிறது என்று அர்த்தம் ஆகும். நம் உடல் அந்த வெப்பநிலையை உணர்ந்துகொண்டே இருக்கும். இதனிடையில் நகரமயமாதல் முக்கியமான காரணம் ஆகும்.

வனம், நகர்ப்புறங்களில் அதிகளவு மரங்கள் இருப்பது, விவசாயம் தொடர்ந்து நடைபெறுவது, கண்மாய், நீர்நிலைகள் வெப்பத்தை தாங்கிக்கொண்டு பூமியின் வெப்பத்தை குறைத்து விடும். இதன் காரணமாக காற்றின் வெப்பநிலை குறைந்து பூமியின் வெப்ப நிலையும் குறைந்தது. இதனிடையில் வனப்பரப்பு, விவசாயப்பரப்பு, நீராதாரம் குறைந்து வருவதால் நீராவிப் போக்கு குறைந்து பூமி தொடர்ந்து சூடாகி காற்றையும் சூடாக்குகிறது. அதன்பின் கட்டிடங்கள் வெப்பத்தை உள்வாங்கிக் கொண்டு இரவில் வெளிப்படுத்துவதும் வெப்பநிலை அதிகரிப்பதற்கு காரணமாகும். அத்துடன் நகரைச் சுற்றியுள்ள விவசாய நிலங்கள் மனைகளாக மாற்றப்படுகிறது. இதன் காரணமாக பூமியின் மீதான சூரியனின் தாக்கம் நேரடி முறையில் அதிகரிக்கிறது. மேலும் வாகனப் பெருக்கமும் முக்கியமான காரணம் ஆகும்.

தற்போது தனி கார், தனி டூவீலர் கலாசாரத்திற்கு மாறிவிட்டோம். இதில் இருந்து வெளிவரும் கார்பன் மோனாக்சைடு, இன்ஜினிலிருந்து வெளிவரும் வெப்பம் அனைத்தும் சேர்ந்து பூமி சூடாவதில் முக்கியமான பங்கு வகிக்கிறது. இதில் வீடுகளில் பயன்படுத்தும் ஏசி இயந்திரமும் அறைக்குள் உள்ள வெப்பநிலையை உள்வாங்கி வெளியே கடத்துவதும், சுற்றுச்சூழல் சூடாவதற்கு காரணம் ஆகும். காடுகள் வளர்ப்பை எவ்வளவுதான் ஊக்கப்படுத்தினாலும் நகரமயமாதலில் மரங்கள் அழிக்கப்படும்போது மீண்டுமாக நடுவதற்கு கால அவகாசம் தேவைப்படுவதாலும் பிரச்னை ஏற்படுகிறது. பிறந்தநாளில் மரங்கள் நடுவதை பள்ளி மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும். ஆரோக்கியமான சுற்றுச்சூழல் வேண்டுமென்றால் மரங்களை வளர்ப்பதன் அவசியத்தை உணரவேண்டும்” என்று அவர்கள் கூறினர்.

Categories

Tech |