பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரான நவாஸ் ஷெரீப்பின் மகள் ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரான நவாஸ் ஷெரீப்பின் மகள் மரியம் நவாஸ் ஆவார். இவர் முஸ்லிம் லீக் நவாஸ் கட்சியின் துணைத் தலைவராக பணியாற்றி வருகிறார். இவ்வாறு இருக்க மரியம் ஐகோர்ட்டு விதித்த நிபந்தனையின் பேரில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஊழல் வழக்கு ஒன்றிற்காக தனது பாஸ்போர்ட்டை நீதிமன்றத்தில் ஒப்படைத்துள்ளார்.
இந்நிலையில் இவர் அடுத்த வாரம் உம்ரா கடமையை நிறைவேற்றுவதற்காக சவுதி அரேபியா செல்ல வேண்டியிருப்பதால் தனது பாஸ்போர்ட்டை திருப்பி தருமாறு ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். இதனை விசாரித்த நீதிபதி ஷா தலைமையிலான அமர்வு மரியத்தின் மனு விசாரணைக்கு உகந்தது அல்ல என்று கூறி அதனை தள்ளுபடி செய்துள்ளது.