Categories
அரசியல் தேசிய செய்திகள்

“ரூ.1000 அபராதம்” ராகுல் காந்திக்கு கொடுக்க வேண்டும்…. நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!!!

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்த ராஜேஷ் குன்டே என்பவர் மகாராஷ்டிர மாநிலம் தானே நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கு விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் என புகார்தாரர் குன்டே தரப்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை நீதிபதி நிராகரித்ததுடன், மனுதாரருக்கு 1000 ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார். இந்த அபராத தொகையை ராகுல் காந்திக்கு வழக்கு செலவுக்காக வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். வழக்கின் அடுத்தகட்ட விசாரணை மே 10ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருப்பதாகவும், அன்றைய தினம் புகார்தாரரிடம் குறுக்கு விசாரணை நடத்தப்படும் என்றும் ராகுல் காந்தியின் வழக்கறிஞர் தெரிவித்தார்

Categories

Tech |