வீட்டில் வைத்து சட்ட விரோதமாக சூதாடிய 8 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டியை அடுத்துள்ள கச்தூரிப்பட்டி புதூரில் வசித்து வரும் பாஸ்கரன் என்பவரது வீட்டில் சட்ட விரோதமாக பணம் வைத்து சூதாட்டம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் எருமப்பட்டி சப்-இன்ஸ்பெக்டர் பூபதி தலைமையில் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது பாஸ்கரன் வீட்டில் சூதாட்டத்தில் ஈடுபட்ட பாஸ்கரன்(45), துறையூரை சேர்ந்த ராமசாமி(31), பழையபாளையத்தை சேர்ந்த வெங்கடாசலம்(50), வரகூரை சேர்ந்த செல்வகுமார்(32), செந்தமிழ் செல்வன்(30), ஆலத்துடையான்பட்டயை சேர்ந்த கருப்பண்ணன்(39) ஆகிய 8 பேரை கைது செய்து அவர்களிடம் இருந்த 60 ஆயிரம் ரூபாயையும் பறிமுதல் செய்துள்ளனர்.