Categories
அரசியல் தேசிய செய்திகள்

வெறுப்புணர்வை புல்டோசர் கொண்டு அகற்றுங்கள்…. ராகுல் காந்தி ட்விட்….!!!

மக்களின் இதயங்களில் இருக்கும் வெறுப்புணர்வை புல்டோசர் கொண்டு அகற்ற வேண்டும் என்று ராகுல் காந்தி ட்விட்டரில் தெரிவித்துள்ளார். ஜஹாங்கீர் போர் வன்முறையில் குற்றம்சாட்டப்பட்டவர்களின் கட்டுமான ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு டெல்லி மாநகராட்சி உத்தரவிட்டது. இதையடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இன்று காலை ஆக்கிரமிப்பு பணி நடைபெற்றது. இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என் வி ரமணா முன் அவசர மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் எந்தவித அறிவிப்பும் இல்லாமல் வீடுகள் அகற்ற படுவதாகவும் அதற்கு தடை விதிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து விசாரணை செய்த நீதிபதிகள் நாளை இந்த வழக்கு தொடரும் என்று அறிவித்தனர். இதையடுத்து அப்பகுதியில் பதட்டமான சூழ்நிலை நிலவியது. அதே நேரம் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில் “இது இந்தியாவின் அரசியலமைப்பின் மதிப்பை தகர்க்கும் செயல். ஏழைகள் மற்றும் சிறுபான்மையினரை குறிவைத்து அரசு நடத்தும் தாக்குதல் இது. அதற்கு பதிலாக மக்களின் இதயங்களில் இருக்கும் வெறுப்புணர்வை புல்டோசரால் அகற்ற வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |