சென்னையில் கூடுதலாக ஒரு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மானியக் கோரிக்கையில், மாற்று திறனாளிகள் நலத் துறையின் கட்டுப்பாட்டிலுள்ள 24 பள்ளிகள் மற்றும் நிறுவனங்களின் கட்டிடங்கள் ரூபாய் 200 கோடி செலவில் மறுசீரமைப்பு செய்யப்படும். மேலும் தென் மாவட்டங்களில் செவித்திறன் குறைபாடுடைய 60 மாணவர்கள் பயன்பெறும் வகையில் உயர்கல்வி பி.காம்., பி.சி.ஏ பாடங்கள் 18 லட்சத்தில் அறிமுகம் செய்யப்படும்.
சென்னையில் ரூபாய் 151 கோடி செலவில் கூடுதலாக ஒரு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் அமைக்கப்படும். மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும் கடன் உதவி திட்டம் அறிவுசார் குறையுடைய ஒரு உலக சிந்தனை ஆற்றல் தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் பெற்றோருக்கு நீடித்து வழங்கும் வகையில் ரூபாய் 5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும் திருமண நிதி உதவித் திட்டம் மாற்றப்பட்டு முழு தொகையும் ரொக்கமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
மாற்றுத்திறனாளிகளுக்கு தையல் இயந்திரம் வழங்க வயது வரம்பு 45 லிருந்து 60ஆக நீட்டித்து ரூபாய் 148 கோடி செலவில் வழங்கப்படும். பொது கட்டடங்களில் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் தடைகளற்ற சூழலை ஏற்படுத்தியுள்ள சிறந்த அரசு நிறுவனம், தனியார் நிறுவனத்திற்கு ரூபாய் 160 லட்சம் செலவில் இரண்டு மாநில விருதுகள் வழங்கப்படும் என்பது போன்ற பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு இருக்கிறது.