ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடைபெறும் பணிகளை ஐ.ஏ.எஸ். அதிகாரி நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரி டேவிதார் மாவட்டத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 1054 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சாலை வசதி, குடிநீர், பழைய ஆட்சியர் அலுவலக அருங்காட்சியகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெறும் பணிகள் குறித்து நேரில் சென்று ஆய்வு செய்தார். இதில் மாநகராட்சி ஆணையர் சரவணகுமார், ஜெகதீசன், உதவி பொறியாளர் கார்த்திகேயன், அரச்செல்வி, சுபாஷ் சந்திரபோஸ், ரமேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன்பின்னர் ஐ.ஏ.எஸ். அதிகாரி டேவிதார் பணிகள் எப்படி நடைபெறுகிறது என்பது குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்துள்ளார்.