ரஷ்யா, சுமார் 5 லட்சம் உக்ரைன் மக்களை வற்புறுத்தி ரஷ்ய நாட்டின் ஒரு தொலை தூர பகுதிக்கு அனுப்பியிருப்பதாகவும் அங்கிருந்து அவர்கள் வெளியேற தடை விதிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
உக்ரேன் நாட்டிற்கான ஐ.நா அமைப்பின் நிரந்தர பிரதிநிதியான Sergiy Kyslytsya, ஒரு லட்சத்து 20 ஆயிரம் சிறுவர்கள் உட்பட 5,00,000 உக்ரைன் மக்களை ரஷ்யா கட்டாயப்படுத்தி இடமாற்றம் செய்திருப்பதாக கூறியிருக்கிறார். அவ்வாறு, உக்ரைன் மக்கள் அனுப்பி வைக்கப்பட்ட இடங்களில் Sakhalin என்ற தீவும் இருக்கிறது.
ஒரு மிகப்பெரிய சிறை போன்று காணப்படும் அந்த தீவில் குளிர்காலம் கடுமையாக இருக்கும். அங்கிருந்து தப்புவதற்கு சாத்தியக்கூறுகள் கிடையாது. அந்த தீவிற்கு கொண்டு செல்லப்படும் மக்கள் அங்கிருந்து இரண்டு வருடங்களுக்கு வெளியேற முடியாத விதத்தில் ஆவணங்கள் பெறப்படுகின்றன.
மேலும் அங்கு சென்ற உக்ரைன் மக்களை வேலை செய்ய வைப்பதோடு, அந்த மக்களை ரஷ்ய மக்களாக மாற்றுவது தான் அதிபர் புடினின் நோக்கம் என்று கூறப்பட்டிருக்கிறது. தாங்கள் உக்ரைன் மக்கள் என்ற எண்ணம் சிறிதும் இல்லாத விதத்தில் அவர்களை மாற்றுவது தான் அதிபர் புடினின் நோக்கம் என்று ரஷ்யாவின் தொலைக்காட்சியை சேர்ந்த ஒரு நபர் கூறியிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.