சென்னையில் உள்ள 56 சதவீத மாணவர்கள் உயரத்திற்கு ஏற்ற எடை இல்லாமல் இருப்பதாக ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.
தேசிய அளவில் மாணவர்களின் உடல் நிலை குறித்து ஸ்போர்ட்ஸ் ஸ்பிரிட் அமைப்பு நடத்திய ஆய்வில் இந்த தகவல் வெளியாகி உள்ளது. இதில் மாணவிகளை விட மாணவர்கள் சிறந்த உடல் நிற குறியீட்டை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 40 சதவீத மாணவர்கள் உயரத்திற்கு ஏற்ற எடை பெற்றிருக்கும் நிலையில் 46 சதவீத மாணவர்கள் மட்டுமே உயரத்திற்கு ஏற்ற உடல் எடை கொண்டிருக்க வில்லை என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் தேசிய அளவில் தனியார் பள்ளி மாணவர்கள் அரசுப் பள்ளி மாணவர்களை விட சிறந்த உடல் நிறை குறியீட்டெண் பெற்றுள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. அதன்படி 47 சதவிகித தனியார் மாணவர்கள் சிறந்த உடல் எடை குறியீட்டை கொண்டு உள்ளனர். ஆனால் 35 சதவிகித அரசு பள்ளி மாணவர்கள் மட்டுமே சிறந்த உடல் நிற குறியீட்டை பெற்றுள்ளனர் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.