சாத்தான்-2 என்று அழைக்கப்படும் ரஷ்யாவின் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ரஷ்ய அதிபர் புதினின் கூற்றுப்படி இது வெல்லமுடியாத ஆயுதம் என்பதாகும். 200 டன் எடையுள்ள இந்த ஏவுகணை அணுசக்தி பொருட்களை சுமந்து செல்லும் திறன் கொண்டது. அதோடு இந்த ஏவுகணை குறுகிய ஆரம்ப ஊக்க சக்தியுடன் செயல்படும் திறன் கொண்டதாகும். இது தொடர்பாக ரஷ்யா அதிபர் புதின் கூறியதாவது, “சாம்ராட் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடந்து இருப்பதற்கு உங்களை வாழ்த்துகிறோம். இது ஒரு ஆயுதமாகும் இனி எங்களிடம் மோத நினைக்கும் எதிரிகள் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து விட்டு செயல்படுங்கள். இந்த உண்மையான தனித்துவமான ஆயுதம் நமது ஆயுதப்படைகளின் திறனை நம் முழுமைப்படுத்தும்.!” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Categories
ரஷ்யாவின் ஏவுகணை சோதனை: ” எதிரிகளே கொஞ்சம் ஜாக்கிரதை….!! அதிபர் புதின் பேச்சு
