Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

வியாபாரத்தை முடித்து வந்தவருக்கு…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. மர்மநபர்களுக்கு வலைவீச்சு….!!

வியாபாரியின் வீட்டு கதவை உடைத்து 12 பவுன் நகை மற்றும் 1 லட்ச ரூபாய் பணத்தை திருடிய மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை அடுத்துள்ள எமனேஸ்வரம் மழையான் குடியிருப்பு பகுதியில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மகள் பார்கவியுடன் பரமக்குடியில் நடைபெற்ற சித்திரை திருவிழாவையொட்டி வைகை ஆற்றில் தோசை வியாபாரம் செய்ய வீட்டை பூட்டிவிட்டு சென்றுள்ளார். இதனையடுத்து வியாபாரத்தை முடித்துவிட்டு மறுநாள் காலையில் வந்து பார்த்தபோது வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்துள்ளது.

இதனை பார்த்து அதிர்ச்சியட்டைந்த பார்கவி வீட்டிற்குள் சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 12¼ பவுன் நகை மற்றும் 1 லட்சம் ரூபாய் பணம் திருடு போயிருந்தது. இதுகுறித்து பார்கவி உடனடியாக எமனேசுவரம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குபதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |