பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தாலுகா அலுவலகம் முன்பு அரசு ஊழியர் சங்கத்தினர் கவன ஈர்ப்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் திடீர் கவன ஈர்ப்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அவர்கள் 3% அகவிலைப்படி, பழைய ஓய்வூதிய திட்டத்தை அறிவிக்க வேண்டும், அரசு ஊழியர்களுக்கு முடக்கப்பட்ட சரண் விடுப்பு ஒப்பளிப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.
இதற்கு வட்டத்தலைவர் சுரேஷ் தலைமை தாங்கியுள்ளார். இதனையடுத்து மாவட்ட துணை தலைவர் பவுல்ராஜ், பொருளாளர் வினோத்குமார் மற்றும் 30க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பியுள்ளனர். இதனால் அப்பகுதியில் சற்று பரபரப்பு ஏற்பட்டுள்ளது.