அரசு கல்வியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் உள்ள காந்திநகர் அரசு கல்வியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் கல்லூரி முதல்வர் மூர்த்தி, எம். பி. கதிர் ஆனந்த், அதிகாரிகள், மாணவர்கள், பேராசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் எம்.பி கதிர் ஆனந்த் 145 மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகள் பட்டம் பெறுவதை மிகவும் பெருமையாக கருதுவார்கள். எனவே நீங்கள் உங்கள் பெற்றோர்களிடம் ஆசிர்வாதம் வாங்குவது அவர்களுக்கு பெருமையாகும் . மேலும் ஆசிரியர் படிப்புக்கு இருக்கும் பெருமை வேறு எந்த ஒரு படிப்புக்கும் கிடையாது.
ஏனென்றால் நீங்கள் தான் வருங்காலத்தில் நல்ல தலைவர்கள், பொறியாளர்கள், மருத்துவர்கள் போன்றவர்களை உருவாக்குவீர்கள் என்ற நம்பிக்கையில் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி வைக்கிறார்கள். எனவே நீங்கள் அனைவரும் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பணி செய்யாமல் நல்ல சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் சேவை புரிய வேண்டும். எனவே நீங்கள் இந்த வெற்றியை உங்கள் பெற்றோருக்கு சமர்ப்பிக்க வேண்டும் என அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.