அசத்தலான அம்சங்களுடன் ரூபாய் 8000 பட்ஜெட்டில் புதிய ரெட்மி ஸ்மார்ட்போன் அறிமுகம் ஆக உள்ளது.
சியோமி நிறுவனம் இந்திய சந்தையில் redmi10A மாற்றும் redmi10 பவர் என இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது.
ரெட்மி 10A அம்சங்கள்:
ரெட்மி 10A ஸ்மார்ட்போன் சியோமி கடந்த ஆண்டு அறிமுகம் செய்த ரெட்மி 9A ஸ்மார்ட்போனின் அப்டேட் செய்யப்பட்ட புது வெர்ஷன் ஆகும். இதன் அம்சங்களைப் பொறுத்தவரை ரெட்மி 10A மாடலில் 6.53 இன்ச் 1600×720 பிக்சல் HD+ 20:9 IPS LCD டாட் டிராப் ஸ்கிரீன், மீடியாடெக் ஹீலியோ G25 பிராசஸர், அதிகபட்சம் 4GB ரேம், 128GB இண்டர்னல் மெமரி இருக்கும். இந்த ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் கைரேகை சென்சார் வழங்கப்பட்டுள்ளது. மற்ற ரெட்மி ஸ்மார்ட்போன்களை போன்றே புதிய ரெட்மி 10A பட்ஜெட் விலை மாடலும் EVOL டிசைன் கொண்டிருக்கிறது. ரெட்மி 10A ஸ்மார்ட்போனில் புகைப்படங்களை எடுக்க 13MP பிரைமரி கேமரா, 5MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.